பெஸ்ட்டல் சித்திரம்
பல்லூடக வர்ணப்பூச்சு
சுற்றுத்தாள் ஓவியம்

காவிய ஓவியர் ரவி வர்மா
ராமாயண, மகாபாரதக் காட்சிகளை ஓவியங்களில் சித்தரித்துப் புகழ்பெற்றவர் ராஜா ரவி வர்மா (1848-1906). அவருடைய ஓவியங்கள் சிலவற்றைக் கீழ்க்காணலாம். ரவி வர்மா இந்த வண்ணங்களில்தான் வரைந்தாரா என்று தெரியவில்லை காலம் பல ஓவியங்களை மங்கிப்போகவும் ஃபோட்டோஷாப் மூலம் ஓவியங்களைத் திருத்தவும் செய்துவிட்டது…
தங்கள் எட்டாம் குழந்தையை மூழ்கடிக்கப்போகும் கங்கையைத் தடுத்து நிறுத்த முயலும் சாந்தனு மன்னன்.

சொத்துகளை இழந்து மகனை ஏலம் விடும் ஹரிச்சந்திரன்.

யுத்தத்திற்கு முன்பு கௌரவர்களிடம் கண்ணன் தூது செல்கிறான்.

மகள் சகுந்தலையை மேனகையிடமிருந்து பெற மறுக்கிறார் விஸ்வாமித்திரர்.

தூங்கும் தமயந்தியைக் கைவிட்டுச் செல்கிறான் நளன்.

காட்டில் நளனால் கைவிடப்பட்ட தமயந்தி.

தமயந்தி அன்னத்துடன் பேசுகிறாள்.

ராதைக்குக் கண்ணன் இன்ட்ரோ.

கீசகனின் முன்பணங்களுக்கு இணங்க மறுக்கிறாள் திரவுபதி.

கீசகனுக்குச் சேவகம் செய்ய வேண்டியிருக்கிறதே என்று திரவுபதி வேதனை.

விஸ்வாமித்திரரும் மேனகையும். மயக்க வந்த மேனகையைவிட விஸ்வாமித்திரர் கவர்ச்சியாக இருப்பதைக் கவனிக்கவும்.

சத்தியவதியிடம் காதல்வயப்படுகிறான் சாந்தனு.
